2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

‘கிளிநொச்சி பாதுகாப்பாக உள்ளது’

Niroshini   / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

தற்போது வரை, கொரோனா பாதிப்பிலிருந்து கிளிநொச்சி மாவட்டம் பாதுகாப்பாகவே உள்ளதாகத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், எனவே இந்த நிலைமையைத்  தொடர்ந்தும் பேணுவதற்கு, சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளைப் பின்ற்றி நடந்துகொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

மாவட்டச் செயலகத்தில், இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் எழுமாறாக மேற்கொள்ளப்படுகின்ற பிசிஆர் பரிசோதனைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் படி, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த
எவருக்கும் தொற்று உறுதிசெய்யப்படவில்லை எனவும் வெளிமாட்டங்களில் இருந்து வருகின்றவர்களுக்கே, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டம் ஓரளவுக்கு பாதுகாப்பாகவே உள்ளதாகவும், ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X