Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாஸ்கரன், நடராசா கிருஷ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன்
இவ்வருட ஆரம்பத்தில் இருந்து இன்று வரை, கிளிநொச்சி வைத்தியசாலையில் 815 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிமனை புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், 585 நோயாளர்களில் அநேகமானோர் கொழும்பு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து டெங்கு காய்ச்சல் தொற்றிய நிலையில் கிளிநொச்சிக்கு வந்து சிகிச்சை பெற்றவர்களாவர் எனவும் இவர்களுள் ஒருவர் டெங்கு தொற்று காரணமாக உயிரிழந்துள்ளாரெனவும் அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்மைக் காலமாக பெய்து வரும் மழை காரணமாக, டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் உள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி நகரிலுள்ள பொதுமக்கள் அதிகம் நடமாடும் பொது இடங்களில், டெங்கு நுளம்பு பெருகும் வகையில் காணப்படும் இடங்களைத் துப்புரவு செய்து கொள்ளுமாறும், அனைத்து வீடுகளிலும் இவ்வாறு நுளம்பு பெருகும் பகுதிகளை இல்லாது செய்யுமாறும் கிளிநொச்சி மாவட்ட மக்களிடம் சுகாதார சேவைகள் பணிமனை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
நாடளாவிய ரீதியில் பரவும் டெங்கு நோய் தாக்கத்தில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில், சுகாதார சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து, மக்களையும் செயற்படுமாறு, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கார்திகேயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சியின் பல பகுதிகளிலும், டெங்கு நுளம்பு பரவும் அபாயகரமான நிலையில் குப்பைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago