2025 மே 19, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் நாய் இறைச்சி விற்பனை?

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

 

கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக உள்ள வியாபார நிலையமொன்றுக்கு முன்னால், நேற்று (26), நாயொன்றின் தோள் மீட்கப்பட்டுள்ளது.

இறைச்சிக்காக விலங்குள் வெட்டப்பட்டு, இறைச்சி பிரித்தெடுக்கப்பட்ட பின்னர், அதன் தோள் எவ்வாறு காணப்படுமோ அவ்வாறே, அங்கு காணப்பட்ட நாய் தோளும் காணப்பட்டுள்ளதாக, அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, பொது சுகாதாரப் பரிசோதக பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொது சுகாதாரப் பரிசோதகர்கள், நாயொன்று வெட்டப்பட்டு, அதன் இறைச்சி அகற்றப்பட்ட பின்னர் எறியப்பட்ட தோள் என்பதை உறுதிசெய்தனர்.

மூன்று மாதங்களான நாய்க்குட்டி ஒன்றே, இவ்வாறு இறைச்சிக்காக வெட்டப்பட்டிருக்கலாமெனச் சந்தேகம் தெரிவித்த பரிசோதகர்கள், இது விபத்தால் இறந்த நாய்க்குட்டியாக இருக்க வாய்ப்பில்லையென்றும் கூறினர்.

இவ்விடயம் தொடர்பில், தாம் அவதானம் செலுத்தி வருவதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X