2025 ஜூலை 12, சனிக்கிழமை

கிளிநொச்சியில் முதன்முதலாக பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிரியாவிடை

எஸ்.என். நிபோஜன்   / 2017 ஒக்டோபர் 10 , மு.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இடமாற்றம் பெற்றுள்ள பொலிஸ் அதிகாரியொருவருக்கு மக்கள் பிரியாவிடை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த சம்பவமொன்று, கிளிநொச்சியில் முதன்முதலாக இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய டி.எம் சத்துரங்க இடமாற்றம் பெற்றுள்ளார். இந்நிலையில், தர்மபுரம் கிராம மக்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில், அவருக்கு நேற்று (09) மாலை தர்மபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் சத்துரங்க கடமையாற்றியபோது பல சட்டவிரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாது சமூகத்துடன் சேர்ந்து பல சமூகப் பணிகளையும் அறப்பணிகளையும் செய்தார். இவரைபோன்று தற்பொழுது பதவி ஏற்றுள்ள பொறுப்பதிகாரி இவரைப்போல் செயற்பட வேண்டும் என தெரிவித்தனர். இந்நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கிராம மக்கள், பொது அமைப்புகள், ஆலய பரிபாலன சபையினர், கிராம அலுவலர்கள் எனப் பலரும் இணைந்து பிரியாவிடை நிகழ்வை ஏற்பாடு செய்தமை இதுவே முதற் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .