2025 மே 08, வியாழக்கிழமை

’கிளிநொச்சியில் வார நாள்களில் தடுப்பூசி செலுத்தப்படும்’

Niroshini   / 2021 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில், வாரத்தின் ஐந்து நாள்களும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தடுப்பூசி செலுத்துப்படுமென, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் எஸ்.சுகந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,  60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதலாவது அல்லது இரண்டாவது தடுப்பூசியை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில், வார நாள்களில் காலை எட்டு மணி முதல் 12 வரை செலுத்திக்கொள்ள முடியுமென்றார்.

அத்தோடு, வரும் வாரமளவில் இந்தத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்தப்படவுள்ளது எனவும்,  அவர் தெரிவித்தார்.

இதேவேளை,  கிளிநொச்சி மற்றும் அயல் மாவட்டங்களில், 25 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.  இதில் 14 பேர் எவ்வித தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளாதவர்கள்,  ஏழு பேர் ஒரு தடுப்பூசியை மாத்திரம் செலுத்திக்கொண்டவர்கள்"  எனவும் எஸ்.சுகந்தன் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X