Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2019 ஜூன் 27 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் கீரி கடற்கரை பகுதியில் உள்ள மீன் வாடி அமைந்துள்ள பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு தொகுதி பீடி சுற்றும் இலைகளை மன்னார் மது வரி திணைக்கள அதிகாரிகள் நேற்று மீட்டுள்ளனர்.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 மூடைகளைக் கொண்ட 140 கிலோ பீடி சுற்றும் இலைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடற்பகுதியூடாக படகு மூலம் கடத்தப்பட்ட பீடி சுற்றும் இலைகளே மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எம். என். மடிய சேகர தலைமையில் சென்ற மது வரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் குறித்த பீடி சுற்றும் இலைகளை கொண்ட மூடைகளை மீட்டுள்ளனர். எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மன்னார் மது வரி திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரனைகளை மன்னார் மது வரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவதோடு, விசாரணைகளின் பின்னர் குறித்த பீடி இலைகள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago
9 hours ago