2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

குருவில் வான் பகுதியில் புதையல் தோண்டிய ஒருவர் கைது

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 16 , பி.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். றொசேரியன் லெம்பேட்

அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவில் வான் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பெயரில் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் இராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவம் மற்றும் அடம்பன் பொலிஸார் இணைந்து குருவில் வான் பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலும் ஆறு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு தொகுதி பொருட்கள் இராணுவம் மற்றும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு புதையல் தோண்டப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. 

தப்பியோடிய சந்தேகநபர்கள் ஆறு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .