Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் குளத்தின் புனரமைப்பு பணிகள் 11 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படவுள்ளன.
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஆனைவிழுந்தான் குளத்தினை புனரமைத்து அதன் கீழ் உள்ள சுமார் 450 ஏக்கர் வரையான வயல் நிலங்களையும் தமக்கு பகிர்ந்தளிக்குமாறும் ஆனைவிழுந்தான் கிராம விவசாயிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
1983ஆம் ஆண்டு மலையகத்திலும் இதர பகுதிகளிலும் இடம்பெற்ற வன்செயல்கள் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் குடியேற்றப்பட்டபோது குறித்த குளத்தின் கீழான வயல் காணிகளை பயிர்செய்கைகளுக்கு வழங்கியபோதும் தொடர்ந்து ஏற்பட்ட இடப்பெயர்வு மற்றும் யுத்தம் காரணமாக அவற்றுக்கான ஆவணங்கள் வழங்கப்படாமலும், காணிகள் கைவிடப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றன.
தற்போது ஆனைவிழுந்தான் குளத்தினைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பில் கருத்துத்தெரிவித்த மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், ஆனைவிழுந்தான் குளத்தினை புனரமைப்பதற்கு அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ், 11 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்று, அதற்கான கேள்வி கோரல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், அதற்கான புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் மேலும் தெரிவித்தார்.
13 minute ago
32 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago
1 hours ago
2 hours ago