Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்க, தென்னிலங்கையில் மாத்திரமின்றி, தமிழ் இலங்கையிலும் அரசியல் சக்திகள் முயல்வதாக, தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைமைக் குழுக் கூட்டம், வவுனியாவில் உள்ள அதன் காரியாலத்தில், நேற்று (08) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்றது.
அதன் பின்னர், தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு, ஒரு மொழி வழி மாநிலமாகவும் பூரணச் சுயாட்சி அதிகாரங்கள் கொண்ட மாநிலமாகவும் இணைப்பாட்சி முறையின் கீழ் நிறுவப்பட்டு, இலங்கை ஒரு நாடு என்ற வரையறைக்குள்ளே அரசியல் தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்பதுதான் தமது நிலைப்பாடெனக் குறிப்பிட்டதுடன், அந்தத் தீர்வைக் காண முடியுமா என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் கேள்விக்குட்பட்டாலும், அந்த நம்பிக்கையை தாங்கள் இன்னும் முற்றுமுழுதாக இழந்துவிடவில்லையெனவும் தெரிவித்தார்.
காலியில், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இணைப்பாட்சி தொடர்பாக, பேசிய விடயம் தொடர்பாக, எமது இயக்கத்தின் தலைவர் அடைக்கலநாதன் மற்றும் பிளட் இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் தெரிவித்த கருத்துகளுக்குப் பதில் கொடுக்கும் விதமாக சுமந்திரன் தெரிவித்தக் கருத்துகளை, தாம் நிராகரிப்பதாகத் தெரிவித்த அவர், தமது கடுமையானக் கண்டனத்தையும் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், எமக்கு யாரும் அரசியல் உபதேசம் செய்யவேண்டியத் தேவையில்லையெனவும் அரசியல் பகவத்கீதையைப் புகட்ட வேண்டாமெனவும் அவர் கூறினார்.
தமது கடமை தமக்கு என்னவெனத் தெரியுமென, அவர் மேலும் தெரிவித்தார்
37 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
58 minute ago