Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2017 நவம்பர் 23 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்து மாதங்களேயான கைக்குழந்தையைத் தவிக்கவிட்டு, அதன் தாய் தலைமறைவான சம்பவமொன்று, வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசித்துவந்த சௌந்தராஜா துக்சிகா என்ற பெண்ணே, கைக்குழந்தையைத் தவிக்கவிட்டுத் தலைமறைவாகியுள்ளார் என, அப்பெண்ணின் கணவர், வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குறிப்பிட்ட பெண், கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த சௌந்தராஜன் என்பவரைக் காதலித்து திருமணம் முடித்துள்ளார். குழந்தை பிறந்ததன் பின், மகளைத்தேடி வவுனியா வந்த குறித்த பெண்ணின் தாயார், ஜாதியைக் காரணம் காட்டி, தனது மனைவியை தன்னிடமிருந்து பிரித்து அழைத்து சென்றுவிட்டதாக, பொலிஸ் முறைப்பாட்டில், சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.
தனது மனைவி துக்சிகா, இம்மாதம் 11ஆம் திகதியன்று, தன்னையும் குழந்தையையும் விட்டுச் சென்றுவிட்டதாகவும் தனது மனைவியைக் கண்டுபிடிக்க பொலிஸாரின் உதவியை நாடுவதாகவும், முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது குழந்தை, தாய்க்காக ஏங்கி அழுவதாகவும் அதனால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊராகச் சென்று தனது மனைவியைத் தேடி வருவதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ள சௌந்தராஜன், தனது மனைவிக் கண்டாலோ அல்லது அவர் குறித்த தகவல் தெரிந்தாலோ, 0763219514 என்ற இலக்கத்துக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
43 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
1 hours ago