Niroshini / 2021 ஜனவரி 13 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி, இன்றைய தினம் (13), மதியம் தோட்டவெளி பகுதியில் அமைந்துள்ள வேதசாட்சிகள் தேவாலயத்தில், விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில், அதன் மாவட்ட இணைப்பாளர் ளு.திலீபன் தலைமையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்ப உறவுகள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவுகள் இணைந்து விசேட வழிபாடுகளை மேற்கொண்டனர்.
சிறைச்சாலைகளில் தற்போது கொரோனா தொற்று பரவுவதன் காரணமாக, தமிழ் அரசியல் கைதிகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவர்களின் குடும்பத்தினர் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தற்போது வரை, சுமார் 14 தமிழ் அரசியல் கைதிகள் வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025