2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘கைது நடவடிக்கை தொடர வேண்டும்’

Princiya Dixci   / 2021 மே 02 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களின் கைதுகள் தொடர்ந்து இடம்பெற வேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் மரியதாஸ் பிறெட்றிக் ஜோன்சன் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 15 நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு கடலில் சுருக்கு வலை பயன்படுத்துதல், வெளிச்சம் பாய்ச்சி தொழில் செய்தல் உட்பட பல்வேறு சட்டவிரோத தொழில்கள் நடைபெற்றன. 

“இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர், மாவட்டச் செயலாளர், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் என்பவற்றில் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்து வந்தோம்.

“தற்போது கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களமும் கடற்படையும் இணைந்து கடந்த 15 நாட்களுக்கு மேலாக சட்டவிரோத தொழிலில் ஈடுபடுகின்றவர்களை கைத செய்து வருகின்றது.  இவை தொடர வேண்டும். 

“கைதுகள் நிறுத்தப்பட்டால் சட்டவிரோத தொழில்கள் அதிகரித்து முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விடும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .