Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 ஜனவரி 24 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன், கே.கண்ணன்
அதிசொகுசு காரில் கேரளக் கஞ்சா கடத்திய பெண்கள் இருவர் உட்பட அறுவரை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார் என, கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கனகராயன்குளம் பொலிஸ் நிலையப்பிரிவில் ஏ-9 வீதியில் விசேட வீதிப் பரிசோதனையில் ஈடுபட்ட பொலிஸார், அதிசொகுசு காரில் கடத்திச் செல்லப்பட்ட 01 கிலோ 66 கிராமும் நிறையுடைய கேரளக் கஞ்சாப் பொதியைக் கைப்பற்றியதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்துடன் 6 சந்தேகநபர்களை, திங்கட்கிழமை (23) கைதுசெய்தனர்.
ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற அதி சொகுசு காரை மறித்து சோதனைக்குட்படுத்திய போதே, கேரளாக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட அறுவரின் தம்பதியினரொருவரும் உள்ளடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago