2025 ஜூலை 12, சனிக்கிழமை

சொகுசு காரில் கஞ்சா: மூவர் கைது

George   / 2017 ஜனவரி 23 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், கே.கண்ணன்

தலைமன்னாரில் இருந்து மன்னார் ஊடாக கொழும்புக்கு, அதி சொகுசு கார் ஒன்றில் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சாப் பொதிகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் வைத்து காரை மறித்து பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

அதன்போது, காரில் மறைத்து வைத்திருந்த 35 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இதன் பெறுமதி 35 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .