Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Sudharshini / 2016 ஜூலை 06 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதார அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்;பட்டு வருவதுடன் அபிவிருத்;திப் பணிகளும் முன்னெடுக்கப்;பட்டு வருகின்றன என கிளிநொச்சி மாவட்ட பிரதி சுகாதார பணிப்பாளர் அ.ஜெயராஜா தெரிவித்தார்.
இதனடிப்படையில் 2016 ஆம் ஆண்டில் சுகாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு மாகாணத்தினால் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் 162 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பெருமளவான நிதி கட்டுமான வேலைகளுக்;கே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வெளிநோயாளர் பிரிவுகள், பிராந்திய வைத்திய நிலையங்கள், சுகாதார வைத்திய திணைக்களங்களில் சிறிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எச்.எஸ்.டி.பி திட்;டத்தின் கீழ் மருத்துவ உபகரணங்கள், தளபாடங்கள் என்;பவற்றுக்காக 55 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்;பெற்றுள்;ளது என்றும் இதனைவிட கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் திருத்த வேலைகளுக்கென மத்திய அரசாங்கத்திடமிருந்து 100 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்;ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago