2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சைகை மொழிபெயர்ப்பாளர் நியமனம்

George   / 2016 ஜூன் 09 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்துக்கு சைகை மொழிபெயர்ப்பாளராக செல்வி நிசந்தினி அமிர்தலிங்கம், அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள நீலன் திருச்செல்வன் பௌண்டேசன் இவர்களது மாதாந்த சம்பளத்துக்குரிய  நிதியை வழங்குகிறது. வவுனியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஓகன் நிறுவனம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் வாய்பேசாதோர் பங்குபற்றும் போது சைகை மொழி பெயர்ப்பை இவர் வழங்குவார். 

இவரது சேவைகள் தேவைப்படுவோர் மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தின் 021 228 3363 எனும் தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது மாவட்ட கூட்டுறவாளர் மண்டபத்துக்கு அருகாமையில் இயங்கும் மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்துடனோ தொடர்பு கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .