2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சிசுவை புதைத்த யுவதி கைது

Kanagaraj   / 2017 மார்ச் 04 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கடந்த 5 நாட்களுக்கு முன்னர் 22 வயதுடைய யுவதி ஒருவர், வீட்டில் பிரசவித்த ஆண் சிசுவை வீட்டின் பின்னால் உள்ள மலசல கூடத்துக்கு அருகில் குழிதோண்டி புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புபட்ட யுவதி, மகப்பேற்றின் பின்னர் ஏற்பட்ட கடும் இரத்த போக்கின் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சம்பவம் வைத்தியர்களின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், அந்த யுவதியை கைதுசெய்த கிளிநாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புபட்ட பெண் கொழும்பில் ஆடைதொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளதாகவும், குறை மாதத்தில் பிறந்த குழந்தை, இறந்து பிறந்தால் குழி தோண்டி புதைத்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .