2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சுமந்திரன் கொலை முயற்சி; 6ஆவது சந்தேக நபருக்கு பிடியாணை

George   / 2017 மார்ச் 13 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட 6 ஆவது சந்தேக நபருக்கு சர்வதேச பிடியாணை பிறப்பித்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, இன்று உத்தரவிட்டார்.

அத்துடன், சந்தேக நபர்கள் ஐவரின் விளக்கமறியலை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிப்பதாகவும் நீதவான் கூறினார்

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட சந்தேகத்தில், ஐவர் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று  (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பொலிஸார், “இவ்வழக்குடன் தொடர்புடைய 6 ஆவது சந்தேக நபர், அவுஸ்ரேலியாவில் வசித்து வருவதாகவும் அனோஜன், கண்ணன், வெற்றி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுவதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்” என, நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து, குறித்த நபரைக் கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை பிறப்பித்து நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .