Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 ஜனவரி 09 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச றோட்டறி கழகத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் முழங்கைக்கு கீழ் கையை இழந்தவர்களுக்கு செயற்கை கைகளை வழங்க உள்ளதாக றோட்டறி கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்ரேலியா றோட்டறி கழகத்தின் அனுசரணையில் இந்த செயற்கை கைகள் வழங்கவுள்ளதாக
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக கை தேவைப்படுபவர்களின் விவரங்களைப் பெற்று செயற்கை கை வழங்கப்பட உள்ளது.
செயற்கை கை தேவைப்படுவோர் தமது பெயர், முகவரி, கிராம சேவகர் பிரிவு, அலைபேசி இலக்கம், பிறந்த திகதி, செயற்கை கை வலது புறமா, இடது புறமா தேவை போன்ற விவரங்களை பிரதேச செயலக சமூக சேவைகள் அலுவலரிடம் உடனடியாக பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தின் 021 321 5529 எனும் தொலைபேசி இலக்கத்துடன்; அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
7 minute ago
20 minute ago
26 minute ago