2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சாரதி - நடத்துநர் சங்கம் அங்குரார்பணம்

George   / 2017 மார்ச் 06 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா, தனியார் பஸ்களில் பணியாற்றும் சாரதி, நடத்துநர்களை உள்ளடக்கிய சங்மொன்று, ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

வவுனியா, தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் கீழ், செயற்படும் வகையில் சாரதி, நடத்துநர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ள இச் சங்கமானது, வட மாகாணத்தில் முன்முதலாக உருவாக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் எஸ்.ரி.இராஜேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சங்கத்துக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

சாரதி, நடத்துநர்களின் நடத்தை மற்றும் தனியார் பஸ்களின் செயற்பாடுகள் தொடர்பாக, தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் இதன்போது வளக்கமளித்தார்.

புதிய சங்கத்தின் தலைவராக செல்வரட்னம் தவேந்திரன், செயலாளராக எம். மயூரன், பொருளாளராக தெய்வேந்திரன் ஜெகதீஸ்வரன், உப தலைவராக கந்தசாமி நிரஞ்சன், உப செயலாளராக அமிர்தலிங்கம் சுதர்சன்ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாக உறுப்பினர்களாக எவ். என். கசன், புஸ்பராஜா சிவானந்தன், டபிள்யு. ஏ. காமினி, ஏ.எம். இர்சாட் ஆகியோரும் ஆலோசகராக சிவலோகமூர்த்தியும் தெரிவு செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .