2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சிறுபான்மை மக்களின் உரிமைகளைக் காப்பதற்கு கல்வியே சிறந்த ஆயுதம்

Menaka Mookandi   / 2017 மார்ச் 01 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“இந்த நாட்டில், சிறுபான்மை மக்களாக இருக்கும் நாம், எமது கல்வி மூலமே, எமது உரிமைகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்” என்று, வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

ஜப்பான், மற்றும்  யு.என்.ஹெபிட்டா ஆகிய நிறுவனங்கள் வழங்கிய நிதியின் கீழ், மன்னார் வேப்பங்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அல்-இக்ரா பாடசாலை, செவ்வாய்க்கிழமை (28) திறந்துவைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வெறும் கல்வியை மாத்திரம் கற்றுக்கொடுக்காமல், ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும்” என்றார்.

“அதேபோன்று பெற்றோர்களும் தனது பிள்ளைகளை கல்வியின் பக்கம் அதிக கவனம் செலுத்த வையுங்கள். ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பது மட்டுமல்ல கல்வி. பாடசாலை முடிந்து வீடு திரும்பும் உங்கள் பிள்ளைகளிடம், நாளாந்தம் நடைபெறும் விடயம் என்ன என்பதை கேட்டறிந்து கொள்ளுங்கள். அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மேலும் என்ன செய்யலாம் எனச் சிந்தியுங்கள்” என்று, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .