2025 மே 09, வெள்ளிக்கிழமை

’சட்டங்களில் மாற்றம் வேண்டும்’

Niroshini   / 2021 ஜூலை 22 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

குற்றவாளிகள், சட்டத்தின் முன்னின்று தப்பிக்கொள்வதற்கு சட்டங்கள் அனுமதிக்காத வகையில், சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென, கிளிநொச்சி பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் தெரிவித்தார்.

கிளிநொச்சியில், இன்று (22)  இடம்பெற்ற சிறுவர் -பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கவனஈர்ப்புப் பேரணியின் பின்னர், ஊடகங்களுக்குக்க கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கொரோனா பரவல் அச்சறுத்தலுக்கு மத்தியிலும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள், கொடுமைகள், கொலைகள் மற்றம் துஷ்பிரயோகங்கள் என நாட்டுக்குள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதெனவும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்ற சிறுவர்கள், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்றும் கூறினார்.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்த அவர், அவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.

குற்றவாளிகள் சட்டத்தின் முன்னின்று தப்பிக்கொள்வதற்கு சட்டங்கள் அனுமதிக்கக் கூடாதெனவும் சட்டங்களில் காணப்படும் குறைபாடுகளை நீக்கி, சட்டங்களை அமல்படுத்தும் வகையிலான சாதகமான சூழலை அரசாங்கம் கொண்டு வர வேண்டுமெனவும், அவர் கூறினார்.

இவ்வாறான சம்பவங்கள்  தொடரும் பட்சத்தில், ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புப் பேரணிகளும் தொடரும் எனவும், வாசுகி வல்லிபுரம் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X