Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நம்பி இருந்தவர்களுக்கு பாரிய இழப்பாகவே அமைந்துள்ளதென, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம் குறித்து அவர், இன்று (24) விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இரங்கல் செய்தியில், அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காகவும், அரசியல் கைதிகளுக்காக வும் மிக நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம், தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்கடத்தல், காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் அரசியல் படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக உயர்நீதிமன்றத்தில் வாதாடி, உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் பேசப்பட்ட ஒரு பிரபல சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசா ஆவர் என்றும், செல்வம் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்னை அவசர கால சட்டத்தின் கீழ் கைது செய்த போது எனது விடுதலைக்காக நீதிமன்றத்தில் வாதாடி பிணையில் செல்ல அனுமதி பெற்றுத் தந்தவர் எனத் தெரிவித்துள்ள செல்வம் எம்.பி, அவரின் இழப்பை ஈடுசெய்ய முடியாத நிலையில் உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .