Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தீர்மானம் நிறைவேற்றப்படாததன் காரணமாக, முக்கொம்பன் கிராமம் வழியாக தொடர்ச்சியாக டிப்பர்களிலும் உழவு இயந்திரங்களிலும் சட்டவிரோதமான முறையில் மணல் கொண்டு செல்லப்படுவதாக, முக்கொம்பன் கிராம பொது அமைப்புகள் கவலைத் தெரிவிக்கின்றன.
2010ஆம் ஆண்டின் பின்னர் முக்கொம்பன் கிராமத்திலிருந்து பூநகரி 10ஆம் கட்டை வரையான கொங்கிறீட் வீதி அமைக்கப்பட்டது. இவ்வீதி அமைக்கப்பட்ட பின்னர் அக்கராயன், குடமுருட்டி ஆற்றுப் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் அகழப்படும் மணல், முக்கொம்பன் கிராமம் வழியாக யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றது. இதுதொடர்பாக பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தெரியப்படுத்தப்பட்ட போதிலும், குறித்த கிராமம் வழியாக மணல் கொண்டுசெல்ல முடியாதென்றும், அத்துடன் எல்லாவற்றிற்கும் மேலாக சங்குப்பிட்டிப் பாலம் வழியாக மணல், மரங்கள் கொண்டு செல்ல முடியாது என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மேலும் குடமுருட்டிப் பகுதியில், தொடரும் மணல் அகழ்வினால் குறித்த கொங்கிறீட் வீதி கடும் சேதமடைந்துள்ளது. குறித்த நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைத்தலைவர்களும், இறுக்கமான நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பூநகரியின் கௌதாரி முனையிலும் தொடர்கின்ற மணல் அகழ்வினால் கடல் நீர் கிராமத்திற்குள் உட்புகுகின்ற அபாயம் உருவாகி உள்ளது.
12 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
2 hours ago