2025 ஜூலை 12, சனிக்கிழமை

சந்தேக நபர்களை ஒப்படைக்குமாறு கோரி சகோதரன் வாக்குவாதம்

Kogilavani   / 2017 ஜனவரி 25 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில்,  7 மாத கர்ப்பிணியை,கோடரியால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டின் கைதுசெய்யப்பட்டுள்ள  சகோதர்கள் இருவரையும், தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரி, கொலைசெய்யப்பட்ட பெண்ணின் சகோதாரன் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ள இருவரும், இன்று புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, நீதிமன்றுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த பொலிஸாரிடம், உயிரிழந்த பெண்ணின் சகோதரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து பொலிஸார், நீதிமன்ற எல்லையை விட்டு குறித்த இளைஞனை வெளியேற்றினர்.

மேற்படி சந்தேக நபர்களை, செவ்வாய்க்கிழமை (24) மண்டைதீவு பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

எனினும், ஊர்காவற்துறை மக்கள் குறித்த நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி, பொலிஸாருடன் முரண்பட்டதையடுத்து, சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .