Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2016 மே 24 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.தபேந்திரன்
நாட்டிலுள்ள மாகாண சமூக சேவைகள் திணைக்களங்கள் மூலமாக வறியவர்களுக்கு மாதாந்த உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தரவுத்தளம் ஒன்றின் மூலமாக ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டத்தை இலங்கை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பில் 9 மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர்களுடன் அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானப் பிரிவு பேராசிரியர்கள் மூலமாக ஆங்கில மொழியிலமைந்த மாதிரி தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த தரவுத்தளத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர்களும் தங்கள் மாகாணத் தரவுகள் உள்ளடங்கிய தரவுத்தளத்தை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் உருவாக்க வேண்டும்.
பொதுசன மாதாந்த உதவிப் பணம், நோய் உதவிக் கொடுப்பனவுகளான சிறுநீரக நோய், புற்றுநோய், தலசீமியா, முள்ளந்தண்டு வட பாதிப்பு போன்ற கொடுப்பனவுகளைப் பெறுவோர் விவரம் இந்த தரவுத் தளத்தின் மூலமாக பேணப்படவுள்ளது.
இதில் பயனாளியின் பெயர், முகவரி, வயது, தேசிய அடையாள அட்டை இலக்கம், கொடுப்பனவு தொகை போன்ற விவரங்கள் இடம்பெறும். அத்துடன் மாவட்டம், பிரதேச செயலகப் பிரிவு, கிராமஅலுவலர் பிரிவு என்பவற்றுக்கு தனியான குறியீட்டு இலக்கமும், அவற்றை ஒரே நேரத்தில் பிரதிபலிக்கும் குறியீட்டு இலக்கமும் உள்ளடங்கும்.
பிரதேச செயலகப் பிரிவு ரீதியாக மென் பிரதிகளாக தயாரிக்கப்படும் இந்த தகவல்கள் மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் ஊடாக மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளரினால் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. அதன் பின்னர், அவை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
மத்திய அரசின் சமூக சேவைகள் திணைக்களத்தினால் 70 வயதை அடைந்த முதியோருக்கான 2,000 ரூபாய் கொடுப்பனவு, மாற்றுத் திறனாளிகளுக்கான 3,000 ரூபாய் கொடுப்பனவு போன்றவற்றுக்கு ஏற்கனவே தரவுத் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனைப்போலவே மற்றைய கொடுப்பனவுகளுக்குமான தரவுத்தளங்கள் உருவாக்கப்படவுள்ளன. இதன்மூலம் நாட்டின் நலன்புரி கொடுப்பனவுகள் யாவும் சரியான வழிகாட்லின் கீழ் செல்ல முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago