Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-றொசேரியன் லெம்பட்
மன்னார் மாவட்டத்தில், 2,000 ரூபாய் கொடுப்பனவு எந்தவோர் அரச சலுகைகளும் பெறாதவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல், இன்று (24) தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இந்த 2,000 ரூபாய் உதவித் தொகையானது, கர்ப்பிணி தாய்மார்கள், சிறுநீரக நோயாளிகள், வயோதிபர் கொடுப்பனவு , ஓய்வூதிய கொடுப்பனவு, சமூர்த்தி போன்ற எந்த ஒரு கொடுப்பனவுகளும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளாத குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது என்றார்.
இதற்காக மன்னார் மாவட்டத்தில் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து 8,700 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .