2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘சாதாரண தர வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்’

Editorial   / 2020 பெப்ரவரி 06 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

தென்னியங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில், க.பொ.த. சாதாரண தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு, துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தவுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ச.கனகரட்ணம் தெரிவித்தார்.

அத்துடன், தென்னியங்குளம் உட்பட துணுக்காயில் உள்ள கிராம மக்கள் எதிர்கொள்கின்ற போக்குவரத்து நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும், அவர் உறுதியளித்தார்.

அண்மையில் நடைபெற்ற தென்னியங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .