எஸ்.என். நிபோஜன் / 2018 மார்ச் 01 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சியிலும் இன்று(01) கண்டன கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இளைஞர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் இணைந்து சிரிய படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறிப்பாக சிரியாவில் குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிராக தங்களின் எதிர்ப்பினை இவர்கள் வெளிப்படுத்தியினர்.
“ஐ.நாவே உனது கள்ள மௌனத்தை கலை, ஈழத்திலிருந்து சிரியாவுக்கு குரல், பொது மக்கள் கொல்லப்படுவதை நிறுத்து, சிரியாவின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கு, 2009 முள்ளிவாய்க்கால், 2018 இல் சிரியா” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி கண்டன கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago