2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சிறுவர் பூங்காவில் ரவுடிகள் சேட்டை

Editorial   / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் நேற்று (22) மாலை மதுபோதையில் ஓட்டோவில் வந்து, பூங்காவுக்குள் நுளைந்த மூன்று ரவுடிகள் அங்கிருந்த பெண்களுடன் சேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது  பூங்காவில் பணியாற்றிவரும் முதியவர் அவர்களை கண்டித்ததோடு பூங்காவில் இருந்து வெளியேறுமாறு தெரிவித்துள்ளார். அதனையடுத்து அவ் முதியவரை அவர்கள் தாக்கியுள்ளனர்.

 இதனை கண்ணுற்ற ஒருவர் முதியவர் மீது தாக்குவதை தடுக்க சென்றபோது அவர் மீதும் ரவுடிகள் தாக்கியதுடன், பெறுமதியான கையடக்க தொலைபேசியையும் உடைத்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அவசர பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த போதும் நீண்டநேரமாகியும் சம்பவ இடத்துக்கு பொலிஸார் சமூகமளிக்காத நிலையில் நேர தாமதமாகி வந்த பொலிஸாரிடம் முறையிட்டதன் பின்னர், வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .