Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 07 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
புதுக்குடியிருப்பு - மந்துவில் பகுதியில் உள்ள 9 ஏக்கர் குளம் ஒன்றின் கால்வாசிப் பகுதியை மூடி, சிவன் ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளதால், குளத்தின் மூலம் தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் மக்களின் இருப்பிடம் கேள்விக்குறியாகி வருவதாக, அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த மணற்குளத்தினுள் மண்டபம் உட்பட ஒரு வீடு மற்றும் கள்ளுத்தவறணையும் கட்டப்பட்டுள்ளன. மந்துவில் கிராமத்துக்கு உரித்து இல்லாதவர்கள் அடாத்தாக இந்தக் குளத்தில் ஆலயத்தை கட்டி விஸ்தரித்து வருகின்றனர். எனவே, மந்துவில் கிராம மக்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் மேற்கொள்வதற்கு ஆயத்தமாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் செல்வாக்கிலேயே இந்த மணற்குளத்திற்குள் ஆலயம் கட்டப்பட்டு மேலும் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் குளத்தில் இருந்து 24 ஏக்கர் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் குளத்தில் நீர் இருப்பதால் 3 கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் வரையான குடும்பங்கள் நல்ல குடிதண்ணீர் பெறுகின்றனர். குளத்தை மூடி வருவதால், நீர் மட்டம் குறையுமாக இருந்தால் கிணற்று நீர் மட்டம் குறைந்து குடிதண்ணீரைப் பெற முடியாது போய்விடும். இயற்கைக்கு குந்தகம் விளைவித்தால், இந்தக் கிராம மக்கள் இடம்பெயர வேண்டி வரும்.
ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் இந்தப் பிரச்சினை பேசு பொருளாக வந்தும், இது தொடர்பில், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. முல்லைத்தீவு கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் குளத்தின் நிலஅளவை வரைபடத்தில் குறித்துக் காட்டப்பட்டுள்ளதன் அடிப்படையில் குளத்தினை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அவர்களை வெளியேற்றுமாறு மே 14ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டது.
ஆனால், பிரதேச செயலாளர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் குளப்பிரச்சினை சம்பந்தமாக போகாத இடமில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
16 minute ago
27 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
40 minute ago