Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மாத்தளன் பகுதி மீனவ குடும்பங்கள் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரியின் ஊர்தியினை வெளியில் செல்லவிடாது தடுத்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
மாத்தளன் பகுதி மீனவர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட சுருக்கு வலையினை பயன்படுத்தி தொழில் செய்ய அனுமதிகோரி இந்த கவனயீர்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.
இதேவேளை தங்கள் கடலில் சுருக்குவலையின் அனுமதியுடன் வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்கள் வந்து மீன்பிடித்து வருவதாகவும் சுருக்குவலைக்கான அனுமதி தங்களிடம் இருந்து மாத்தளன் கடலில் உள்ள மீனினை பிடிக்கமுடியாத நிலையில் தாங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்
இன்று (12) காலை மாத்தளன் பகுதிக்கு கடல் தொழில் நடவடிக்கையினை கண்காணிக்க சென்ற கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் ஊர்தியினையும் அதிகாரிகளையும் மாத்தளன் பிரதேச மீனவர்கள் பெண்கள் உள்ளிட்டவர்கள் அதிகாரிகளையும் ஊர்தியினையும் மறித்து மண்எண்ணெய்கானுடன் தங்களுக்கான முடிவினை அதிகாரிகள் தெரிவிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்ளபேவதாக தெரிவித்து கவனயீர்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.
இதன்போது குறித்த அதிகாரிகள் வளிமறித்த மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.
கடந்த 08ஆம் மாதம் 12 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்க கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அமைச்சர் வந்து சுருக்குவலை தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என அறிவித்து விட்டு சென்றுள்ள நிலையில் இன்று ஒன்றரை மாதங்களாக சுருக்குவலைக்கான அனுமதி வைத்திருந்தும் தாங்கள் தொழில் செய்யமுடியாத நிலையில் இருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இலங்கையில் எல்லா மாவட்டங்களுக்கும் ஒரே சட்டம்தான் ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்திற்குமட்டும் விதிவிலக்கா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
திருகோணமலை,யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சுருக்குவலையினைபயன்படுத்தி முல்லைத்தீவு கடலில் தொழில் செய்கின்றார்கள் எங்கள் கடலில் நாங்கள் தொழில் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் மாத்தளன் பகுதி மக்களின் பிரச்சனைக்கு விரைவில் உயர் அதிகாரிகளுடன் கதைத்து முடிவு எடுத்து கொடுப்பதாக போராட்டம் நடத்திய மக்களுக்கு தெரிவித்துள்ளதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளார்கள்.
தொடர்ந்தும் சுருக்கு வலைக்கான அனுமதிஇருந்தும் தொழில் செய்வதற்கான அனுமதி கிடைக்காவிடின் உயிரை மாய்க்கவும் தாங்கள் தயங்கமாட்டோம் என குடும்ப பெண்கள் தெரிவித்துள்ளார்கள்.
39 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
1 hours ago