Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
தேசிய சுற்றாடல் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக, மன்னார் மாவட்ட செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட செயலகத்தில், இன்று (01) காலை 11.30 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், தேசிய சுற்றாடல் தின நிகழ்வு எதிர்வரும் 5ஆம் திகதி, தேசிய ரீதியில் மன்னாரில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளாரரெனத் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு, மன்னார் மாவட்ட செயலகமும் ஜனாதிபதி செயலகமும் இணைந்து, ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கமைய, எதிர்வரும் 5ஆம் திகதி மன்னாருக்கு வருகை தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மன்னார் - மதவாச்சி பிரதான வீதி தம்பனைக்குளம் பகுதியில், முதலில் மரநடுகை நிகழ்வில் கலந்துகொள்வாரென அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தேசிய சுற்றாடல் தின நிகழ்வு நடைபெறும் மன்னார் நகரசபை மைதானத்துக்கு வருகை தருவாரென, அவர் மேலும் கூறினார்
7 minute ago
38 minute ago
38 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
38 minute ago
38 minute ago
51 minute ago