2025 மே 08, வியாழக்கிழமை

செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரிக்கு தொற்று

Niroshini   / 2021 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-. அகரன்

வவுனியா, செட்டிகுளம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு, கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

செட்டிகுளம் பிரதேசத்தில், கடந்த சில நாள்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், குறித்த அதிகாரியின் வாகன சாரதிக்கு கடந்த 19ஆம் திகதியன்று, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

 இந்நிலையில், குறித்த வைத்தியரும் பிசிஆர் பரிசோதனையை முன்னெடுத்ததில்,
 அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
 
இதனையடுத்து, அவர் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X