2025 ஜூலை 10, வியாழக்கிழமை

டெங்கு அபாயம் : அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

Menaka Mookandi   / 2017 ஜனவரி 10 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலானது,  தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் பரவ தொடங்கியுள்ளது.

இந்த வருடத்தின் முதல் ஏழு நாட்களில், கிராஞ்சி சிவபுரம், மலையாளபுரம், அம்பாள்குளம், கணேசபுரம், வலைப்பாடு, கல்மடு, ஏழாம் யுனிற் செல்வாநகர் மற்றும் விசுவமடு ஆகிய இடங்களிலிருந்து எட்டுப்பேர் டெங்குக்காய்ச்சல் காரணமாக கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலையில் ஒருமுறை பரிசோதித்துக் கொள்வதை உறுதிப்படுத்துவதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றுங்கள். மாவட்டத்திலுள்ள கர்ப்பிணிகள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள் காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடவும்.

அத்துடன் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் புகையூட்டலை மேற்கொண்டு நோய் பரப்பும் நுளம்புகளைக்கொல்லுதல் முக்கியமான ஒரு நடவடிக்கையாகும்.

காய்ச்சல் ஏற்பட்ட அடுத்துவரும் 24 மணிநேரத்தினுள் அவ்வீடுகள் மற்றும் சுற்றயலில் புகையூட்டல் மேற்கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவ்வாறு புகையூட்டல் 24 மணிநேரத்தினுள் இடம்பெறவில்லை எனில் 0770212765 எனும் அலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு புகையூட்டல் விரைவாக இடம்பெறுவதை உறுதி செய்துகொள்ளுங்கள்” என குறிப்படப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .