2025 ஜூலை 12, சனிக்கிழமை

டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி மாணவி உயிரிழப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 18 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என். நிபோஜன்

கிளிநொச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி மாணவி ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை (17) உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் உயர்தர மாணவியான செல்வராசா துளசி (வயது 18) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை என்பன எச்சரித்துள்ளதுடன், கட்டுப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .