2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தென்னஞ்செய்கைக்கு ஊக்குவிப்பு வேண்டும்

Princiya Dixci   / 2017 மார்ச் 22 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளியில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கு, உதவி அமைப்புகள், தென்னங்கன்றுகளை வழங்கி, தென்னஞ்செய்கையினை ஊக்குவிக்க வேண்டுமென, இப்பகுதிப் பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த காலப் போரினால் தென்னை வளம் கொண்ட பச்சிலைப்பள்ளியின் பல்லாயிரக்கணக்கான தென்னைகள் அழிவடைந்துள்ள நிலையில், மீள்குடியேற்றத்தின் பின்னர் அரசாங்கத்தினரதும் தனியாரினதும் பல தென்னந் தோட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இருந்த போதிலும், பல குடும்பங்கள், தங்களுடைய தென்னைகள் அழிவடைந்த இடத்தில் தென்னைகளை மீள் நடுகை செய்ய முடியாதளவுக்குப் பாதிப்படைந்து நிலையில் காணப்படுகின்றன.

இந்நிலையில், பிரதேச செயலகத்தினாலோ அல்லது உதவி அமைப்புகளினாலோ ஒவ்வொரு குடும்பமும் தென்னஞ்செய்கையில் ஈடுபடுவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு, தென்னங்கன்றுகள் வழங்கி ஊக்குவிப்பு உதவிகளையும் வழங்குமாறு, பச்சிலைப்பள்ளில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்கள் சார்பாக பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .