Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 பெப்ரவரி 03 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலய தியான மண்டப திறப்புவிழாவில் கலந்துகொண்ட, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை,
'இன்று வவுனியாவின் பல பகுதிகளிலும் பல்வேறு நிலையங்கள் திறந்து வைக்கப்படுகின்றன. எமது மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழ் அமைக்கப்பட்ட இந்த தியான மண்டபத்தினை இப்பொழுது திறந்து வைத்து உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.
வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலயம் அமைந்திருக்கும் இப்பகுதியானது, மலைக்குன்றுடன் இணைந்த சோலை வனப்புக்களுடன் கூடிய ஒரு இடமாக அமைந்திருப்பதுடன் சுதேச வைத்தியத் தேவைக்கு பயன்படக்கூடிய மூலிகைகள், செடி, கொடிகள் என்பவற்றை இயற்கையாகவே கொண்டுள்ள சூழலாக அமைந்துள்ளது.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இங்கு வருகை தந்திருந்தேன். இன்று சில சேவைகளை வழங்கி இக்கைங்கரியத்தை இயற்ற வந்துள்ளதில் பெருமை அடைகின்றேன்.
இவ் ஆலயத்தின் இயற்கையான அமைதிச் சூழல் இவ் ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அமைதியாக தியானத்தில் அமர்ந்திருக்கவும், இறைவனைத் துதிக்கவும் இறை சிந்தனையில் ஈடுபடவும் அனுசரணை வழங்குவதற்கான சிறப்பான ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த ஆலய சூழலில் இங்குள்ள மக்களின் கோரிக்கைக்கு அமைவாக 2.64 மில்லியன் ரூபாய் செலவில் சமய சார்பான சுற்றுலா என்ற அடிப்படையின் கீழ் ஒரு தியான மண்டபத்தை எமது அமைச்சு அமைத்துக் கொடுத்துள்ளது.
அதனை இன்று அடியவர்கள் பாவனைக்காக திறந்து வைத்திருப்பது மனதிற்கு திருப்தி அளிக்கின்ற ஒரு செயலாக அமைந்துள்ளது.
இவ் ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நால்வகை சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இயற்கையான ஆலயமாக விளங்குகின்றது.
இதன் மூர்த்தி பெரிது. அது போல் இதன் கீர்த்தியும் பெரிது. இவ் ஆலயத்தில் இன்று திறந்து வைக்கப்படுகின்ற தியான மண்டபம் இங்குள்ள சின்னஞ்சிறார்களுக்கு தியான வகுப்புக்களையும், அறநெறி வகுப்புக்களையும் நடாத்துவதற்கும், ஆலயத்தின் விஷேட பூஜை திருவிழா காலங்களில் சிறப்பு கதா காலட்சேபங்கள் நடாத்துவதற்கும், இன்னோரன்ன சமயச் சொற்பொழிவுகள், அறிவியல் கருத்துக்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஏற்ற ஒரு மண்டபமாக விளங்கும்.
அந்தக் காலங்களில் சுமார் 65 வருடங்களுக்கு முன்னர் நல்லூர் ஆதீனத்தின் முதல் தம்பிரானாக அவர் வரமுன்னர், தற்போதைய ஆதீன முதல்வரின் குருவானவர் மணிபாகவதர் என்று அழைக்கப்பட்டார்.
அவரின் கதா காலட்சேபங்கள் அப்பொழுதெல்லாம் கொழும்பிலும் மற்றைய நகரங்களிலும் மிகப் பிரசித்தி பெற்றிருந்தன. இப்பொழுது கதாகாலட்சேபங்கள் குறைந்து விட்டன. வவுனியாவில் அவற்றை உயிர்ப்பிக்க இந்த தியான மண்டபம் ஏதுவாக விளங்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்" என, சி.வி.தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago