2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

துரித கதியில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்

George   / 2016 மே 23 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேச சபையினால் 2016ஆம் ஆண்டுக்கான பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மிக துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் பிரதேச சபையின் செயலாளர் இராசையா தயாபரன், நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'இந்த வருடத்தில் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பிரதேச ரீதியாக சமமாகவும் தெரிவு செய்யப்பட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தலைமன்னார் கிராமத்தில் சுற்றுலாத்தள நிர்மாணம், பேசாலை தெற்கு சென் அந்தோனியார் உள்ளக வீதி புனரமைப்பு, பெரியகரிசல் சின்னக்கரிசல் உள்ளக வீதி புனரமைப்பு, தாழ்வுபாடு சென் அந்தோனியார் வீதி புனரமைப்பு, முதலை உள்ளக வீதி, தாழ்வுபாடு பாடசாலை கொங்கறீட் வீதி போன்றவை புனரமைக்கப்படுகின்றன.

மேலும் வீதி விளக்குகள் பொருத்துதல், இறைச்சி கடைகள் நிர்மாணித்தல், வீதிகள் திருத்த வேலைகள், நீர் விநியோகம் என பல வேலைத்திட்டங்களை நடை முறைப்படுத்து தொடர்பில் வடமாகாண சபை அதிகாரிகளிடம் அனுமதியினை பெற ஆவணங்களை  அனுப்பி வைத்துள்ளோம்.

அனுமதி கிடைக்கப்பெற்றதும் குறித்த வேலைத்திட்டங்களும் துரித கதியில் நிறைவேற்றப்படும்' என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .