Editorial / 2018 மார்ச் 25 , பி.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
குடும்ப தகராறை தடுக்க சென்ற பெண் மீது கத்தி குத்து மேற்கொள்ளப்பட்டதில் பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் ஒன்று, வவுனியா - செட்டிகுளம் - வீரபுரம் பகுதியில், இன்று (25) இடம்பெற்றுள்ளது.
கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு நடை பெற்று வந்தமையால் இருவரும் சில மாதங்களாக பிரிந்து இருந்ததுடன் விவாகரத்துக்கும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (25) பிற்பகல் குறித்த பெண் தனது சிறிய தாய் வீட்டில் இருந்துள்ளார். இதன்போது அங்கு சென்ற கணவன் அவரை கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். இதனை அவதானித்த பெண்ணின் உறவினர் ஒருவரும் பெண்ணின் சிறிய தாயும் தடுப்பதற்காக குறுக்கே சென்றபோது, அவர்கள் இருவர் மேலும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இதில், சிறிய தாயின் மணிக்கட்டு பகுதி முற்று முழுதாக துண்டிக்கப்பட்டது.
துண்டிக்கப்பட்ட பகுதியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண், மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதேவேளை, இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொரு நபர், வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில், கணவனை செட்டிகுளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
19 minute ago
27 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
27 minute ago
38 minute ago