Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மார்ச் 06 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா - குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலியாகினர்.
இதனையடுத்து கோபமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டமையால் குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
வவுனியா - குருக்கள்புதுக்குளம் பகுதியில் மன்னார் பறயநாலங்குளம் பிரதான வீதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றது.
மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து குருக்கள் புதுக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, உள் வீதியில் இருந்து பிரதான வீதிக்கு வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளைத் செலுத்திச்சென்ற தந்தை சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகியதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.
விபத்தினையடைந்து ஆத்திரமடைந்த கிராமமக்கள் பேருந்தினை தாக்கியமையால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த பூவரசங்குளம் பொலிசார் நிலமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். எனினும் அது பலனளிக்காத நிலையில் விசேட அதிரடிப்படையினர் களத்திற்கு அழைக்கப்பட்டு நிலமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சம்பவத்தில் குருக்கள்புதுக்குளம் பகுதியை சேர்ந்த பு.சிறிதரன் வயது 46மற்றும் அவரது 14 வயது மகனான டினோகாந் ஆகிய இருவரே மரணமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
42 minute ago
6 hours ago