2025 ஜூலை 10, வியாழக்கிழமை

தனியார் பஸ் ஊழியர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

George   / 2017 ஜனவரி 17 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பஸ்களை, தனியார் பஸ் தரிப்பிடத்தில் நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வவுனியாவில் இன்று ஆர்ப்பட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா ஏ9 வீதியை வழிமறித்து 100க்கும் மேற்பட்ட தனியார் பஸ் ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ9 வீதியின் போக்குவரத்து சில மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மத்திய பஸ் நிலையத்தில், இலங்கை போக்குவரத்து சபைக்காக கட்டடப்பட்ட புதிய பஸ் தரிப்பிடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நேற்று திறந்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .