Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 ஜூலை 22 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - நாயாற்று பகுதியில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர், புத்தளத்தில் இருப்பதை முல்லைத்தீவு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நாயாற்று பகுதியில், 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர்களை கொரோனா சிநிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாயாற்று பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் புத்தளத்துக்குத் தப்பிசென்றுள்ளார்.
இவர் புத்தளத்தில் வசிக்கும் இடம் தொடர்பான விவரங்களை முல்லைத்தீவு பொலிஸார் உறுதிப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
புத்தளத்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் பொலிஸாருடன் சுகாதார பிரிவினரும் ஈடுபட்டுள்ளார்கள்
நாட்டில் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு வீதிசோதனை நடவடிக்கைகள் இறுக்கமாக காணப்படும் நிலையிலும் கடலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், மாகாணம் விட்டு மாகாணம் சென்ற கொரோனா நோயாளி தொடர்பில் பல்வேறு சர்சைகள் எழுந்துள்ளன என, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் வைத்தியர் மு.உமாசங்கர் தெரிவித்துள்ளார்..
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago