Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 ஜனவரி 18 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவர் ஆண்டு 2047 தமிழர் தொடர் புத்தாண்டு நிகழ்வும் தமிழ் வாழ்வாகிய சான்றோர்கள் நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (17) கிளிநொச்சி கூட்டுறவு மண்டப முற்றத்தில் நடைபெற்றது.
தமிழ்ச்சங்கத் தலைவர் வே.இறைபிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்புச் சொற்பொழிவினை முல்லைத்தீவு செம்மலை மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் இரா.கோகுலன் நிகழ்த்தினார்.
நாட்காட்டியினை ஆசிரியர் கோகுலன் வெளியிட கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.பி.அமலராஜ் முதல் நாட்காட்டியினைப் பெற்றுக்கொண்டார். கிளிநொச்சி தமிழ்ச்சங்கம் கிளிநொச்சி மாவட்டத்திலே தமிழையும் தமிழர் பண்பாட்டினையும் வளர்ப்பதில் பெரும் பங்காற்றி வருகின்றது.
பாடசாலை மாணவர்களிடையே தமிழ்ச் சான்றோர்கள் தொடர்பான போட்டிகளை நடாத்துதல், விழா எடுத்தல், தமிழர் பண்பாட்டு விழாக்களை நடாத்துதல், முழுமதிநாள் நிகழ்வுகளை நடாத்துதல், ஆண்டுதோறும் தமிழ்ச் சான்றோர்களை நினைவுகொள்ளும் வகையில் நாள்காட்டியினை வெளியிடுதல் என பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றது.
தமிழ்மொழியினையும் பண்பாட்டினையும் பேணுவதற்கு இளைய தலைமுறையினர் மத்தியில் இவ்வாண்டு கருத்தரங்குகளையும் போட்டிகளையும் நடாத்த தமிழ்ச்சங்கம் தீர்மானித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
14 minute ago
27 minute ago
33 minute ago