Niroshini / 2021 மே 05 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன், எஸ்.நிதர்ஷன்
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட தமிழ்க் கிராமங்கள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பில் அரசாங்கத்துடன் பேசி, இதற்கு தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரவிகரனுக்கும் இடையில், நேற்று (04) சந்திப்பொன்று நடைபெற்றத. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தங்களுடைய பிரதேசங்களில் சிங்கள மக்களின் பெரும்பான்மைத்துவம் வந்தால் தமிழர்களுடைய பிரதேசம் இல்லாமல் ஆக்கப்பட்டுவிடுமென்றார்.
செம்மலையிலிருந்து கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி வரைக்கும் இருக்கின்ற பகுதிகளை மகாவலி அதிகாரசபை ஆக்கிரமித்து, அந்தப் பகுதிகளை தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிகை மேற்கொண்டுவருவதை அறிவதாதகத் தெரிவித்த அவர், தாங்கள் இது தொடர்பாக பிரதமருடன் பேச வேண்டுமெனவும் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில், இந்த அரசாங்கத்துடன் பேசி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேணடுமெனவும், அவர் தெரிவித்தார்.
“இந்த ஆக்கிரமிக்கு எதிராக பாரிய அளவில் மக்களைத் திரட்டி நாம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கவேண்டும். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்திருக்கின்ற நிலையில், இந்த ஆக்கிரமிப்பு விடயம் தொடர்பாக அரசாங்கத்துடன் பேசி, இதற்கு தீர்வைக் காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்றும், மாவை சேனாதிராஜா கூறினார்.
8 hours ago
8 hours ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
14 Nov 2025
14 Nov 2025