Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
பதினைந்து ஆண்டுகளாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்த போதிலும், ஒரு கணக்கறிக்கையைக் கூடத் தாம் பார்க்கவில்லையென, அக்கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில், நேற்று (18) நடைபெற்ற வவுனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் 20ஆவது வருடப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஈழமக்கள் புரட்சிகர முன்னணியைச் சேர்ந்தவரான அவர், இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தரையாற்றிய அவர், வவுனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தைப் பார்த்துப் பொறாமைப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அச்சங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கறிக்கையைப் போன்று, 15 ஆண்டுகளில் தம்மால் ஒன்றையும் காண முடிந்திருக்கவில்லை என்றார்.
போக்குவரத்துச் சங்கமொன்றுக்கு இருக்கக்கூடிய விடயங்களை, தமிழ்த் தலைமைகளிடம் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பார்க்க முடியவில்லையெனவும், சர்வாதிகார போக்கான நிலைமையே கூட்டமைப்பில் இருக்கிறதெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கில் காணப்படும் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பாகவும் கவனஞ்செலுத்திய அவர், வடக்கில் வீதி விபத்துகள் அதிகரித்து காணப்படுகின்றனவெனவும், வவுனியாவில் விபத்துகளைக் குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக, வவுனியா மாவட்ட செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago