2025 மே 06, செவ்வாய்க்கிழமை

‘தமிழ்த் தேசியத்தின் பெயரால் பசிலால் பல கட்சிகள்’

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 21 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ. கீதாஞ்சன்

“சிதறிப்போய் இருக்கின்ற எதுவும் செய்யமுடியாமல் வீழ்ந்து போய் இருக்கின்ற இந்த தமிழ்ச் சமூகத்தை எவனும் பயன்படுத்த முடியும். புவிசார் அரசியல் இன்று எங்களை ஆட்டிப் படைக்கின்றது. சீனா வருகின்றது. இந்தியா, சீனாவுக்கு எதிராக வருகின்றது அல்லது அமெரிக்கா அக்கறையாக இருக்கின்றது. நோர்வே வந்து பேச்சுவார்த்தை நடத்துகின்றது அல்லது பிரித்தானியாவில் இருக்கின்றவர்கள் எங்கள் மீது அன்பு கொண்டுள்ளார்கள் என்பது எல்லாம் புவிசார் அரசியல் என்று வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் க. சிவனேசன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் ஸ்தாபகரும் செயலதிபருமான கதிர்காமர் உமாமகேஸ்வரனின் 77 ஆவது ஜனன தின நிகழ்வு முள்ளியவளையில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு சிறப்புரைஆற்றும் போது சிவனேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிவனேசன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இன்று வரலாற்றை திரிவுபடுத்துபவர்கள் கூறுகின்ற விடயம் உமாமகேஸ்வரனுக்கும் இந்தியாவுக்கும் ஏதோ முரண்பாடு இருந்தது; இந்தியா அவரை கொன்றுவிட்டது என்று கூறுகின்றார்கள். அப்படி நடக்கவில்லை அது தவறான விடயம்.  

இந்தியாவில் இருக்கின்ற ஒரு சில அதிகாரிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு மாலைத்தீவில் இருக்கின்ற பானு அப்துல் சைதிடம் பணத்தைப் பெற்று எங்களிடம் இருந்த தோழர்கள் சிலரை விலைக்கு வாங்கி கொலைசெய்தார்கள் என்பதுதான் உண்மை. அந்த காலகட்டங்கள் ஒவ்வொன்றிலும் நான் அவருடன் இருந்திருக்கின்றேன். அவரை கொலைசெய்தது இந்தியாவோ,புலிகளோ அல்ல அது சதித்திட்டம்” என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X