Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 05 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்குட்பட்ட பிரதான வீதியாக அமைந்துள்ள ஏ9 வீதியில் திருமுறுகண்டிப் பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்ட வேண்டுமென, கிராம அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
திருமுறுகண்டி பிள்ளையார் கோவிலுக்கு நாள்தோறும் பல நூற்றுக்கணக்கான மக்கள், ஊர்திகளில் செல்பவர்கள் வழிபாடுகளை மேற்கொள்கின்றார்கள்.
இந்நிலையில், இந்தப் பகுதியில் ஏதாவது ஒரு பிரச்சினை நடைபெற்றால் மாங்குளம் பொலிஸார்தான் சம்பவ இடத்துக்கு வருகை தரவேண்டும்.
அதனைவிட அருகில் கிளிநொச்சி மாவட்டத்தில் எல்லை கிராமங்கள் காணப்படுகின்றன. இந்தக் கிராமங்களின் பாதுகாப்பு நடவடிக்கைக்கும் பொலிஸாரின் கண்காணிப்பு தேவையாக உள்ளது.
எனவே, திருமுறுகண்டி பகுதியில் ஒரு பொலிஸ் காவலரண் அமைக்குமாறு, பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஆனால், இதுவரை கண்டுகொள்ளாத நிலையே காணப்படுவதாக, கிராம அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago