Niroshini / 2021 ஜூலை 29 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் நேற்று (28) மாலை அடையாளம் காணப்பட்ட 5 கொரோனா தொற்றாளர்களில், 37 வயதுடைய ஒருவர் இறந்த பின்னர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
அத்தடன், திருவிழாக்களில் கலந்துகொள்ளும் பக்தர்கள், சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடித்து, திருவிழா முடிவடைந்த பின்னர் தேவையற்று நடமாடுவதை தவிர்த்தும், கூட்டமாக இருப்பதை தவிர்த்தும் உடனடியாக வீடுகளுக்கு செல்லுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், உயிரிழந்தவர் மன்னார் - கட்டையடம்பன் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இளம் குடும்பஸ்தராக அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் அவருக்கு ஏற்கெனவே இருதய நோய் இருப்பதாகவும் கூறினார்.
அத்துடன், மன்னார் மாவட்டத்தில், புதன்கிழமை (28) வரை, 52 ஆயிரத்து 682 பேருக்கு, கொரோனா தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் இதில் 46 ஆயிரத்து 920 பைசல் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும, அவர்; கூறினார்.
இதை தவிர, 550 பேருக்கு ஏற்கெனவே 2ஆவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்களுக்கு 2ஆவது தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் ஆரம்பமாகுமெனவும், அவர் கூறினார்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில், இதுவரை 30 வயதுக்கு மேற்பட்டோர் 70 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்குவதற்கு
மேலும், 'இக்காலங்களில் ஆலயங்களில் திருவிழாக்கள் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் இடம்பெறுவதால் குறித்த திருவிழாக்களில் கலந்துகொள்ளும் பக்தர்கள், தமது சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடித்து, திருவிழா முடிவடைந்த பின்னர் தேவையற்று நடமாடுவதை தவிர்த்தும், கூட்டமாக இருப்பதை தவிர்த்தும் உடனடியாக வீடுகளுக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளுகின்றோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
1 hours ago