Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - கோட்டைக்கட்டியகுளம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுச்சந்தை கட்டட வேலைகள் நிறைவடைந்து மூன்றாண்டுகள் கடந்தும் திறந்து வைக்கப்படாமை தொடர்பாக கிராம மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
துணுக்காய் பிரதேச சபையால் ஆறு இலட்சம் ரூபாய் செலவில் குறித்த சந்தைக் கட்டடம் அமைக்கப்பட்ட போதிலும்,இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.
இதன் காரணமாக, கோட்டைக்கட்டியகுளம் கிராமத்தில் வாழ்கின்ற 120 வரையான குடும்பங்களும் அயல் கிராமமான அம்பலப்பெருமாள்குளம் கிராமத்தில் வாழ்கின்ற 100 வரையான குடும்பங்களும் அக்கராயன் பகுதிச் சந்தைகளுக்கும் மற்றும் மல்லாவி, துணுக்காய் சந்தைகளுக்கும் செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம் கிராமங்களில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை, மேற்படி சந்தை இயங்கத் தொடங்கும்போது, விற்பனை செய்ய முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .